Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

100நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, பிப். 5: நூறு நாள் வேலைதிட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் 100நாள் வேலைதிட்டத்தில் மகாத்மா காந்திபெயர் நீக்கத்தை கண்டித்தும், தேசப்பிதா பெயரை சேர்க்க வேண்டும், சம்பள பாக்கியை வழங்க வேண்டும். 200 நாள் வேலை வழங்க வேண்டும்.

முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி விட்டுகட்டியில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. ஒன்றியச்செயலாளர் வீரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்டசெயற்குழு ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, மணிகண்டன், சதிஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.