Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டையில் பிப்ரவரி 14 காதலர் தினமா, கருத்தடை தினமா?

முத்துப்பேட்டை, பிப். 5: முத்துப்பேட்டையில் பிப்ரவரி 14 காதல் தினமா அல்லது கருத்தடைகள் தினமா? என தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பைத்துல் மால் அல் முஸ்லிமீன் அமைப்பு சார்பில் ரமலானை வரவேற்போம் மற்றும் காதலர் தினம் இஸ்லாமிய பார்வை என இரு தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் முத்துப்பேட்டையில் உள்ள 7 முக்கிய இடங்களில் நேற்று நடைபெற்றது.

இதில் பேச்சாளர்கள் அதிரை உமர், ரியாஸ், அமீன் ஆகியோர் ‘பிப்ரவரி 14 காதல் தினமா அல்லது கருத்தடைகள் தினமா?’ என்ற பெயரிலே நடக்கக்கூடிய சமூகசீர்கேடுகள், அவலங்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனங்களை எடுத்து கூறினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.