தஞ்சாவூர், நவ. 4: தஞ்சையில் நகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சை ரயிலடி அருகே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சை டவுன் டிஎஸ்பி ஆதித்யன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் 150க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இப்பேரணி மாநகரில் முக்கிய வழியாக சென்று புதிய பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது.


