Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொரடாச்சேரியில் ஆசிரியர்களுக்கு புதிய பாட திட்டத்திற்கான பயிற்சி

நீடாமங்கலம், ஜூன் 4: கொரடாச்சேரியில் ஆசிரியர்களுக்கு புதிய பாட திட்டத்திற்கான பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 01.06.2023 முதல் 03.06.2026 வரை, 3 நாட்கள் 1 முதல் 3ம் வகுப்பு வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இப் பயிற்சியில் 97 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு கருத்தாளர்களாக இளம்பருதி, லக்ஷ்மணன் பானுப்பிரியா, விஜயா, வனிதா, மலர்கொடி, தனலட்சுமி, பிரபாகரன், நீலகண்டன், மாரிசாமி, அற்புதா, மீனாட்சி ஆகியோர் செயல்பட்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சத்யா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, ஆசிரியர் பயிற்றுநர் பிரபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலை அறிவியல், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான ஆசிரியர் கையேடுகள் வழங்கப்பட்டது.