Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி 6ந்தேதி சாலை மறியல் போராட்டம்

முத்துப்பேட்டை, ஜீன் 4: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாகி சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் வரும் காலத்தில் கட்சியை எவ்வாறு வழிநடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காளிமுத்து, வீரசேகரன், அமிர்தலிங்கம், தேவகி, உப்பூர் ராஜேந்திரன் ஆகியோர் தங்களது கருத்துகளை விளக்கி பேசினார்கள். தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சமீபகாலமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை உடனடியாக சரி செய்ய வேண்டி வரும் 6ந்தேதி சனிக்கிழமை. எடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும், அனைத்து சிறுகுறு விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.