Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,பிப்.4: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான பெயரை மாற்றியுள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், இந்த திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த கோரியும், ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட கோரியும் திருவாரூர் அருகே மாவூர் கடை தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட பொறுப்பாளர் இடும்பையன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.