Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

மன்னார்குடி, ஜூன் 3: பள்ளிகள் நாளை (4ம்தேதி) திறக்கப்பட உள்ளதால், மன்னார்குடி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, 2026-27 கல்வியாண்டிற்காக பள்ளிகள் நாளை (4ம்தேதி) திறக்கப்பட உள்ளன. கடும் வெப்பம் காரணமாக ஜூன் 1-ல் இருந்து 4-ஆம் தேதிக்கு திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே தேதியில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மன்னார்குடி அடுத்த சவளக்காரன் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களை வரவேற்கும் வகையில் வகுப்பறைகள், பள்ளி கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் மற்றும் வளாகங்கள் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளி வளாக தூய்மை, குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.புதிய கல்வியாண்டை மாணவர்கள் உற்சாகத்துடன் தொடங்கும் வகையில் ஆசிரியர்கள் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி திறப்பு நாளுக்குள் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்படும் என சவளக்காரன் ஆதிதிராவிட நலப் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிநாதன் தெரிவித்துள்ளனர்.