Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்

திருவாரூர், மே 19: திருவாரூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டிற்கு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று 12ம் வகுப்பிற்கு கடந்த 8ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் 10ம் வகுப்பிற்கான தேர்வு முடிகள் நாளை (20ந் தேதி) வெளியிடப்படவுள்ளது. மேலும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் ஒரு பகுதியினர் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு ஜுன் 4ம் தேதியும், 4 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 1ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள், சமையல் கூடம் உள்ளிட்ட அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.