Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்தால் நடவடிக்கை

திருவாரூர், ஜூன் 18: திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீரை மின் மோட்டார் கொண்டு அதிகளவில் எடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களின் மூலம் தினசரி குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிகளிலுள்ள சில குடியிருப்புகளில் தனிநபர்கள் மூலம் மின் மோட்டார் கொண்டு குடிநீர் உறிஞ்சப்படுவதால் கிராமத்திலுள்ள இதர அடுத்தடுத்த வீடுகளுக்கு சீரான குடிநீர் சென்றடைவதில்லை