திருவாரூர்,நவ.2: திருவாரூர் அருகே டூவீலரை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் அருகே தொழுவனங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் நன்மாறன் மனைவி ஆர்த்தி (25). இவர் தனக்கு சொந்தமான டூவீலர் ஒன்றினை வீட்டின் முன்பாக கடந்த 26ந் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்த நிலையில் மறுநாள் காலை பார்க்கும்போது அந்த டூவீலர் திடீரெனமாயமாய் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் திருவாரூர் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா அடிப்படையில் குற்றவாளிகளை தேடி நிலையில் நாகை வெளிப்பாளையம் தாமரை குளத்தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் விஜய் (30) மற்றும் பொள்ளாச்சி தாலுகா கெங்களிர் பட்டறை தெருவை சேர்ந்த லிங்கமுத்து மகன் கார்த்தி (26) ஆகிய இருவரும் டூ வீலரை திருடியது தெரிய வந்ததன் பேரில் இருவரையும் நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர்.


