Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வரும் 15ந் தேதிக்குள்; சம்பா பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

திருவாரூர், நவ. 2: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிர்களை வரும் 15ந் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் 15ந் தேதி ஆகும். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தங்கள் நெற்பயிர்களை காப்பீடு செய்தால் வறட்சி, புயல், அதிக மழை போன்ற எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் இழப்புகளை ஈடுசெய்ய பிரதம மந்திரி பயிர் காப்பீடுத்திட்டத்தில் பயன்கிடைக்கும். எனவே இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நடப்பு சம்பா பருவ நெல்லுக்கு பிரிமீயமாக ஹெக்டேருக்கு ரூ ஆயிரத்து 441.25 மற்றும் ஏக்கருக்கு ரூ.583.5 செலுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம்.

எனவே திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ, இ-சேவை மையங்கள் அல்லது தேசிய பயிர்காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னரில்” ( www.pmfby.gov.in ) நேரிடையாக காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரம் அறிய மேற்கண்ட இணையதள முகவரியிலோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது வேளாண்மை அலுவலரை அணுகி பயன்பெறலாம். எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் தங்களது பயிர்களை உடனடியாக காப்பீடு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.