நீடாமங்கலம், நவ.16: நீடாமங்கலம் நகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிராச்சாரம் செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் (மார்க்சிஸ்ட்) நீடாமங்கலம் நகரத்தில் மோடி அரசின் மக்களின் விரோத போக்கையும், விலைவாசி உயர்வையும் கண்டித்தும் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி தலைமையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சுமதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் காளியப்பன், ராபர்ட்பிரைஸ், வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் ராஜா, பிலிப்ஸ் வாலிபர் சங்கம் ஒன்றிய தலைவர் ராஜகுரு, ஜெய்சன், கலைவேந்தன் கலந்து கொண்டனர்.


