Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி சாலை மறியல்

முத்துப்பேட்டை, செப். 30: முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விடக்கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது விவசாயிகள். பொது பணித்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.மேட்டூரில் இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாததன் காரணமாக குருவை சாகுபடி என்பது முற்றிலுமாக பொய்த்துப்போனது இதனால் விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து சம்பா சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து செப்டம்பர் 3 தேதி தமிழக முதல்வர் தண்ணீர் திறந்ததை அடுத்து ஒரு போக சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துப்பேட்டை, இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் உள்ள ஆறுகள் முழுமையாக வறண்டு காணப்படும் வரும் நிலையில் மரைக்காகோறையாற்றில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் தேவதானம், பின்னத்தூர், நாச்சிகுளம், ஆலங்காடு, உப்பூர், வட சங்கேந்தி, அரியலூர், குலமாணிக்கம், பாண்டி, எக்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் வைக்க முடியாமல் நெல் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.