திருவாரூர், செப். 30 : 8வது ஊதிய குழு ஓய்வூதியர்களுக்கு பொருந்தாது என்ற ஒன்றிய அரசின் வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்ய கோரி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.8வது ஊதிய குழு ஓய்வூதியர்களுக்கு பொருந்தாது என்ற ஒன்றிய அரசின் வேலிடேசன் சட்டத்தால் ஓய்வூதியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும்,
அகவிலைப்படியில் 50 சதவிகிதத்தினை அடிப்படை ஒய்வூதியத்துடன் கமுட்டேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 10 ஆண்டுகள் 8 மாதங்களாக குறைத்திட வேண்டும், ஓய்வூ பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊராட்சி செயலர்கள், பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7 ஆயிரத்து 850 வழங்கிட வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


