Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூர், செப். 28: திருவாரூர் மாவட்டத்தில் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியினை நாளை மறுதினத்திற்குள் பொருத்த வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்புகிடங்குகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம மேலாண்மை அமைப்பு இணையதளத்துடன் இணைப்பதற்கு கடந்த மாதம் 31ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் சுமார் 12 சதவிகித வாகனங்களுக்கு மட்டுமே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை மறுதினத்திற்குள் (30ந் தேதி) கனிமங்கள் எடுத்துச்செல்லும் அனைத்து வானகங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி அவற்றை இணையதளத்துடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், 30ந் தேதிக்குள் இணைக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே வாகனங்களில் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும். ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச்செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது. எனவே, திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரி உரிமையாளர்கள், மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியினை பொருத்தி பதிவு செய்துக்கொள்ளுமாறு இதன் மூலம் இறுதியாக அறிவுறுத்தப்படுகிறது.

வரும் 1ந் தேதி முதல் ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்களில் கனிம நடைச்சீட்டு, இடைமாற்று நடைச்சீட்டு இல்லாத வாகனங்களில் கனிமங்கள் கொண்டுசெல்வது கண்டறியப்பட்டால் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.