Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

முத்துப்பேட்டை,செப். 26: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை சார்பில் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி வரி தண்டளர் அலுவலர் பார்வதி கண்ணன், ஊரக வளர்ச்சித் துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குலவேந்தன், கேஸ் மேலாளர் முருகேசன், மின்சார வாரிய அதிகாரி கார்த்தி, வட்ட வழங்கல் துறை ஆர்ஐ வெங்கட்ராமன், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இதில் முத்துப்பேட்டை நுகர்வோர் பாதுக்காப்பு குழு செயலாளர் தம்புசாமி, இணைச்செயலாளர் லக்கி நாசர், உதயமார்த்தாண்டபுரம் நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் பசூல் ரஹ்மான், நாச்சிகுளம் நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் பொன்.வேம்பையன் ஆகியோர் பேசுகையில்: முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள வடிகால் பகுதிகளை தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது இதனால் மழைக்காலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்புகள் உள்ளன.