Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பேட்மிட்டனில் வெண்கலம் வென்ற மன்னார்குடி வீரர்

மன்னார்குடி, செப். 26: ஜப்பானின் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பல்வேறு விளையா ட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, ஆண்கள் பேட்மிட்டனில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் மன்னார்குடியை சேர்ந்த இளம் பேட்மிட்டன் வீரர் ஹரிஹரன் இடம் பெற்றிந்தார். இவரின் துடிப்பான் ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.சிறுவயது முதலே பேட்மிட்டான் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட ஹரிஹரன், தொடர் பயிற்சியின் மூலம் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை மெருகேற்றி கொண்டார்.

மாநில அளவில் பல்வேறு வெற்றிகளை பெற்ற இவர், தேசிய அளவில் கடந்த 2017 ல் நடந்த ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்துள்ளார். மேலும், தேசிய அளவிலான இரட்டையர் பேட்மிட்டன போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற ஹரிஹரன் - ரூபன் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. இதையடுத்து தனது கடும் பயிற்சி மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து தற்போது ஆசிய விளையாட்டு போட்டி யில் வெண்கலம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் ஹரிஹரன். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பேட்மிட்டன் அணியில் ஹரிஹரன் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றிருப்பது மன்னார்குடி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.