Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் கடைமடை வரை காவிரி நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவாரூர், செப். 25: திருவாரூர் மாவட்டத்தில் கடைமடை வரையில் காவிரி நீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாய சங்க தலைவர்களான சேதுராமன், ராமமூர்த்தி, தம்புசாமி, சேகர், முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மாவட்டத்தின் கடைமடை பகுதி வரையில் காவிரி நீர் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆறுகளில் இருந்து வரும் செட்டர்களை அடைத்து ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் நீர் நிரம்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தமிழக அரசு கேட்டு பெறுவதற்கு தவறியதன் காரணமாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பா சாகுபடிக்கு உரிய நீரையாவது கேட்டு பெற வேண்டும்,

குறுவை சாகுபடியினை போன்று சம்பா சாகுபடிக்கும் உரம் மானியம் வழங்கிட வேண்டும், ஆறுகளில் இருந்து சாகுபடி வாயில்களுக்கு நீர் செல்லாத நேரத்தில் டீசல் இன்ஜின் கொண்டு நீர் பாய்ச்சும் நிலை இருந்து வருவதால் டீசலுக்கான மானியம் வழங்கிட வேண்டும், கோயில் குத்தகை நிலங்களுக்கு உரிய சிட்டா அடங்கல் வழங்கிட வேண்டும்,அரசை விட தனியாரிடம் மட்டுமே கூடுதலான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் கூடுதல் விலை இல்லாமலும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.