திருவாரூர், செப்.25: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உரிய அனுமதி இல்லாமல் ஆற்றில் மண் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா நார் சிங்கம்பேட்டை அருகே செல்லும் சோழசூடாமணி ஆற்றின் கரையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு உரிய அனுமதி இல்லாமல் சவுடு மண் அள்ளப்படுவதாக புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமாருக்கு தகவல் வந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் குடவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு ஜேசிபி இயந்திரம் கொண்டு டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்த குடவாசல் சிமிழி கிராமததை சேர்ந்த விஜயபாண்டியன் (40) மற்றும் பெரும் பண்ணையூர் கிராமத்தைசேர்ந்த மார்ட்டின் (54) ஆகிய இருவரையும்கைது செய்து மண் கடுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் செங்கல் அறுப்பதற்காக சவுடு மண் கடத்தப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்த நிலையில் இதில் தொடர்புடைய குடவாசல் அத்திக்கடையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (56) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement


