திருத்துறைப்பூண்டி,செப்.25: திருத்துறைப்பூண்டி அருகே விவசாய நிலங்களுக்கு அருகே இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு. 200-க் கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பூசலங்குடி ஊராட்சிக்குட்பட்ட பூஞ்சையூர் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகே இறால் பண்ணை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பூஞ்சையூர் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூஞ்சையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், விவசாய தொழிலாளர்களாகவும் உள்ளனர். மேலும், இப்பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய சாகுபடி நிலங்கள் உள்ளன.
இந்த நிலையில், பூஞ்சையூர் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகே திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர்சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இறால் பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


