Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருத்துறைப்பூண்டி அருகே திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பொது விநியோக விற்பனை கூடம் பயன்பாட்டிற்கு வருமா?

திருத்துறைப்பூண்டி, ஜூன் 25: திருத்துறைப்பூண்டி அருகே திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பொது விநியோக விற்பனை கூட்டம் விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியில் திருத்தங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் பொது விநியோக விற்பனை கூடம் கடந்த 2019-2020ஆம் ஆண்டு அப்போது எம்எல்ஏவாக இருந்த ஆடலரசன் பரிந்துரையின் பேரில் ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோக விற்பனை கூடம் கட்டப்பட்டது. இந்நிலையில் கட்டடம் கட்டப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் மின் இணைப்பு வழங்கப்படாமலும், கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. தற்போது பூசலாங்குடி ஊராட்சி பகுதியில் உள்ள சீட்டு போடப்பட்ட கூடத்தில் அங்காடி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து சில நேரங்களில் அரிசி மூட்டைகள் நணைந்து சேதமாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின் இணைப்பு வழங்கி புதிதாக கட்டப்பட்ட பொதுவிநியோக விற்பனை கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.