Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

திருவாரூர், செப். 23: திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறும். இதேபோல் கோட்ட அளவில் ஆர்.டி.ஒக்கள் தலைமையில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியிலும் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட அளவிலான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நாளை காலை 10.30 மணியளவில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.