Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேட்டூர் அணை திறந்தும் பலனில்லை ஏரிகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன

வலங்கைமான், செப். 23:மேட்டூர் அணை திறந்தும் உரிய தண்ணீர் கிடைககததால்ஏரிகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றனபருவமழை கைகொடுக்குமா என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணைதிறக்கப்பட்டு 20 நாட்களை கடந்த நிலையில் பாசன ஆறுகள் தண்ணீர் இன்றி வறண்டுகிடப்பதுடன் நீர்நிலைகள் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். தற்போதைய அரசு கர்நாடகாவிடம் இருந்து உரிய நீரை கேட்டு பெறாததால் டெல்டா மாவட்டங்களை பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படுவது விவசாயிகளைச் சார்ந்த பிரச்சனை என தமிழக அரசு தற்போது எண்ணுகிறது.