Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மத்திய, மாநில அரசை கண்டித்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாடம்

திருவாரூர், செப். 23: மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திருவாரூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும், தேசிய பணமயமாக்கல் கொள்கை 2.0 என்ற பெயரில் பொது சொத்துக்களை குத்தகைக்கு விடுவதை கைவிட வேண்டும், மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும், விதை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் ஒன்றிய அரசின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும்,

இதேபோல் எண்ணூர் மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, போக்குவரத்தில் ஆயிரம் மின் பேருந்துகளை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்ககூடாது, டாஸ்மாக் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர படுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், டி.என்.சி.எஸ்.சி கொள்முதல் பணியாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்