Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தரைக்கடைகளுக்கு மாற்று இடம் வழங்க கோரி சாலையோர வியாபாரிகள் திடீர் மறியல்

திருவாரூர், ஜூன் 22: திருவாரூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இக் கோரிக்கைகளை ஏற்று நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நகரில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு களை முற்றிலுமாக அகற்றினார்.

மேலும், தரைக் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை போடக்கூடாது என கூறி அவர்களின் தராசுகளை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு என மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலையோர வியாபார தொழிலாளர் சங்கத்தின் சங்கத்தின் நகரத் தலைவர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் பழைய பேருந்து நிலையம் அருகே தங்களது தள்ளு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.