Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவாரூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் காசநோய் ஒழிப்பு இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர், ஆக. 21: திருவாரூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் காசநோய் ஒழிப்பு இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் காசநோய் ஒழிப்பு இயக்கத்தில், நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்களும் (என்.சி.சி.) ஒரு பங்காளராக சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனையொட்டி கடலூர், 5ம்எண் நேவல் என்.சி.சி கட்டளை அதிகாரி, கமாண்டர் செந்தூர்சன் வழிகாட்டுதலின்படி, திருவாரூர் வ.சோ. ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் கப்பற்படைப்பிரிவு என்சிசி மாணவர்கள் சார்பில் திருவாரூர் காசநோய் மையம் இணைந்து காசநோய் ஒழிப்பு இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் தியாகராஜன் தலைமையிலும், செயலர் டாக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட காசநோய் மையத்தின் வீரிய காசநோய் ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் கலந்து கொண்டு, 2 வாரங்களுக்கு மேல் சளி இருமல், மூச்சுத்திணறல், சளியுடன் ரத்தம் வருதல், பசியின்மை, எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், இரவில் வியர்த்தல் போன்ற காசநோய் அறிகுறிகள் குறித்தும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் மாவட்ட பொது மற்றும் தனியார் பங்களிப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நிக்க்ஷய் செயலி பற்றி எடுத்துரைத்தார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராசு காசநோய் குறித்து வினாடி வினாப்போட்டியை நடத்தினார்.

இதில் தமிழ்மணி, தேவதர்ஷன், ரகுராம், அகிலேஸ்வரன், ஹரிஹரன், சிவஞானம் ஆகிய என்சிசி மாணவர்கள் பரிசுகள் பெற்றனர். மேலும் காசநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, சுமார் 1,800 ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் என்.சி.சி முதன்மை அதிகாரி சதீஷ்குமார் நன்றி கூறினார்.