நீடாமங்கலம், ஆக. 20: நீடாமங்கலம் அருகே வெண்ணாறு பகுதியில் பாலைவனம் போல் வறண்டது விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் பாலைவனம் போல் வறண்டு காட்சியளிக்கும் ஆறுகள். தென்மேற்கு பருவமழை பொய்த்த காரணத்தால் மேட்டூர் அணையில் போதிய நீரில்லாததால் கடந்த ஜூன் மாதம் 12ம்தேதி திறக்கக்கூடிய தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் மேட்டூர் அணை தண்ணீரை நம்பி குறுவை சாகுபடி க்கு ஆற்று நீரில் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆங்காங்கே வயல்கள், ஆறுகள் குளம், குட்டைகள், ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் கல்லணையிலிருந்து பிரிந்து வரும் வெண்ணாறு நீடாமங்கலம் அருகே உள்ள கோரையாறு தலைப்புக்கு (மூணாறு தலைப்பு) வந்து அங்கிருந்து சிறிய வெண்ணாறு, பாமனியாறு, கோரையாறு என்ற மூன்று ஆறுகள் டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திற்கு விவசாயத்திற்கு செல்கிறது.
ஆனால் தற்போது ஏற்படும் கால சூழ்நிலை காரணமாக ஆறுகள் பாலைவனம் போல் வறண்டு காணப்படுகிறது. போதிய மழை இல்லாத காரணத்தினால், ஆங்காங்கே வயல் பகுதிகளும், குளம், குட்டைகளும் வறண்டு காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைய தொடங்கியுள்ளது. இதனால் காலாநடைகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறது. தமிழக தவெக அரசு சம்பா சாகுபடிக்காவது மேட்டூர் அணை திறக்கப்படுமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.


