Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் உழவன் செயலியை பயன்படுத்தி உரம் இருப்பு தெரிந்து கொள்ளலாம்

திருவாரூர், மே 20: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி உரங்கள் இருப்பு போன்றவற்றை அறிந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: உழவன் செயலி மூலம் பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலியாகும். இந்த உழவன் செயலியின் நோக்கம் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு, வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும். தொழில்நுட்பங்கள் போன்றவை பற்றி அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.