மன்னார்குடி, ஆக. 19: திருவாரூர் அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் தினசரி வருகை விவரம், 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய பாடங்களான கணிதம், வேதியியல், உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் என அந்தந்த பாடப் பிரிவுகளின் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவின் தரத்தினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சமையலறையில் உணவு தயாரிக்கும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்து, சமையலறையினை எப்பொழுதும் சுகாதாரமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் பொதுதேர்வினை நன்கு படித்து, நல்ல முறையில் அணுகி வாழ்வில் வெற்றிபெற வேண்டுமெனவும், மகாகனி, பாதாம், நீர் மருது, நாவல், சீத்தா, கொய்யா, புளி, தூங்குமூஞ்சி உள்ளிட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி, மரக்கன்றுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையினை பார்வை யிட்டார்.
அதனை தொடர்ந்து, கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளின் வருகை விவரம், கல்வி தரம் மற்றும் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள், தற்போது நடை பெற்று முடிந்த பருவத்தேர்வின் தேர்ச்சி விகிதம் குறித்தும், ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியர் களையும் தனித்தனியாக சந்தித்து தங்களது பாடப்பிரிவின் சதவீதத்தினை கேட்டு, இனிவரும் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், கலெக்டர் மோகனச் சந்திரன் அறிவுறுத்தினார்.இதைத்தொடர்ந்து, கோட்டூர் ஒன்றியம், ஆதிச்சபுரம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அரிசி, கோதுமை, சர்க்கரை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வுகளின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், தெய்வநாயகி மற்றும் பள்ளி தலைமையா சிரியர்கள் இந்திராகாந்தி, இளம்பருதி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


