Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கட்டிமேடு நீர்தேக்க தொட்டிக்கு 300 மீட்டர் இணைப்பு குழாய் பதிக்காததால் கிராமங்களில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு டெண்டர் பணியை உடனே துவக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஜூன் 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு, சேகல், ஆதிரெங்கம் பிச்சன்கோட்டகம் கிராமங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் சரிவர வழங்க முடியதால் தொடர் போராட்டம் சாலை மறியல் என பல மாதமாக பல போராட்டங்கள் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் பெறும் முயற்சியில் கட்டிமேடு குடிநீர் தொட்டிக்கு திருத்துறைப்பூண்டியில் மெயின் குடிநீர் தொட்டியில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவில் குழாய் அமைக்கப்பட்டது. இருப்பினும் நிதிபற்றாமல் கடைசியில் 300 மீட்டர் குழாய் பதிக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டம் ஆறுமாதத்திற்கு மேலாக பயனற்று கிடக்கிறது. மேற்படி 300 மீட்டர் குழாய் பதிக்க தேர்தலுக்கு முன்பே டெண்டர் விடப்பட்டும், தேர்தலை காரணம் காட்டி வேலை நடைபெறவில்லை.