Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி மீனவர் பலி மீன்பிடித்து கொண்டிருந்த போது சோகம்

முத்துப்பேட்டை, டிச.18: முத்துப்பேட்டை அருகே வளவனாற்றில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் ரவி(58). மீனவரான இவர் நேற்று காலை அப்பகுதியில் கடலுக்கு செல்லும் வளவனாற்றில் கடல் முகத்துவாரம் அருகே வலைவிரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது திடீரென்று தண்ணீரில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். அப்போது அங்கு மீன் பிடிக்க சென்ற சக மீனவர்கள் இதைக்கண்டு முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்குவந்த இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் நீரில் மூழ்கி பலியான மீனவர் ரவியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது சகோதரர் பக்கிரிசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்தநிலையில் மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் முத்துப்பேட்டை மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.