நீடாமங்கலம், ஆக. 18: நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசத்தை காப்போம் பாஜ அரசை அகற்றுவோம் நிறைவு நாள் நடைபயணம்.எம்பி பங்கேற்பு.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசத்தை காப்போம் பாஜ ஆட்சியை அகற்றுவோம் பிரச்சார நடைபயணத்தில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமை வகித்தார். ஒன்றிய மையங்களான பொதக்குடி, வடுவூர், நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சார நடைபயணம் நடந்தது. நீடாமங்கலத்தில் நடந்த பிரச்சார நடைபயணத்தில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.
+
Advertisement


