Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணை திறப்பு காலதாமதம் மீன் குஞ்சுகளை பாதுகாக்க மானியத்தில் தீவனம் வழங்க கோரிக்கை

வலங்கைமான், ஜூலை 18: மேட்டூர் அணை நீர் திறப்பு காலதாமதம் ஆகும் நிலையில் நலிந்து வரும் மீன் வளர்ப்பினை பாதுகாத்திட மீன் வளர்ப்போருக்கு மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் ஆகியவற்றினை மானியத்தில் வழங்கிட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சொந்தமான குளங்கள் உள்ளது. அதுபோன்று கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் என 75க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இந்நிலையில் குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாகவும், மழைநீரை சேமிக்கும் வகையிலும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் 100 சதவீத மானியத்தில் பல்வேறு காலகட்டங்களில் 500க்கும் மேற்பட்ட பண்ணைக்குட்டைகள்அமைக்கப்பட்டன.