எஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீடாமங்கலம், செப். 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் நீடாமங்கலம் ஒன்றிய குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஒன்றிய செயலாளர் ராதா, ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைய ஒன்றிய பொருளாளர் பாரதிமோகன், துணை செயலாளர் பாரதிமோகன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராவணன் ஒன்றிய நிர்வாக குழு ஸ்டாலின் பாரதி உள்ளிட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் குடியிருக்கும் மனை வழங்கு, குடிமனை பட்டா வழங்கு, வீடு கட்ட ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய், கோவில் மனையில் குடியிருப்பவருக்கு பட்டா வழங்கு நீடாமங்கலம் ஒன்றியம் முழுமையும் குடிநீர் உப்பு நீராக மாறி உள்ளது.
இதனால் கிட்னி உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அனைத்து ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், நீடாமங்கலம் ஒன்றியம் முழுமையும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது, பொதுமக்கள் நலன் கருதி மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் . உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடைய மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


