Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விவசாயிகள் வேதனை; பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 16: தமிழகத்தில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள கர்நாடகத்திலிருந்து தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் பெற்று தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

இதில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதில் கூறியதன் படி முழுபயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். சமீபத்தில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய், காவிரியில் இருந்து தண்ணீர் பெறுவது குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆற்று தண்ணீரை நம்பி இருந்த விவசாயிகள் மேட்டூர் அணை திறக்காததால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள இயலாமல் தவிர்த்து வருகின்றனர்.

இனியும் காலம் தாழ்த்தாமல் கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டும். ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் மன வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் குறுவை சாகுபடி தொகுப்பாக ரூ. 134 கோடி அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல. எனவே குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். காவிரியன் குறுக்கே கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.