Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பூத்து குலுங்கும் தாமரை பூக்கள் மும்முனை மின்சாரம் இல்லாததால் 150 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

தஞ்சாவூர், ஜூன் 16: மெலட்டூர் அருகே மும்முனை மின்சாரம் இல்லாததால் 150 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள மணப்படுகை கிராமத்தில் மின்மோட்டார் மூலம் விவசாயிகள் கோடை சாகுபடி செய்திருந்தனர். இந்த பகுதியில் போதிய அளவு மும்முனை மின்சாரம் வராததால் 150 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மும்முனை மின்சாரம் போதிய அளவு இல்லாததால் மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை.

இதனால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மின்தடை குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் தருவதில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கருகும் பயிர்களை காப்பாற்ற தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். அப்போது தான் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போது நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வீணாகி வருவது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.