தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இதுவரை 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை அறுவடை 1.20 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல்

திருவாரூர், ஆக. 14: திருவாரூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இது வரையில் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிவுற்று 1 லட்சத்து 21 ஆயிரம் மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.305 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 2025&26 காரீப் பருவத்திற்காக ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதனையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரையில் நடைபெற்ற நெல் கொள்முதலில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 727 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

பின்னர் 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்ற நிலையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் நடைபெற்ற அறுவடையினையொட்டி மாவட்டம் முழுவதும் 540 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் 5 லட்சத்து 62 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் கோடை நெல் சாகுபடியானது. கடந்த மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரையில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றது.

அதன்பின்னர் முன்பட்ட குறுவை சாகுபடியானது சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் வரையில் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணியானது நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் கோடை மற்றும் குறுவை சாகுபடி நெல் 15 ஆயிரத்து 870 விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 567 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 305 கோடி வரவு வைக்கப்பட்டது.

Advertisement

Related News