தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டி அருகே 110 பயனாளிகளுக்கு 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, ஆக 14: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் நேர்காணல் முகாமில் 110 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் வழங்கினார்.

Advertisement

திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கொத்தமங்கலம், நுணாக்காடு, மேட்டுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாமில் கலெக்டர் தெரிவித்ததாவது: மக்கள் நேர்காணல் முகாமானது, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் நேர்காணல் முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாவினையும், 10 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் குறுவை தொகுப்புத்திட்டம் 2026-2027, மாங்கனீசு (நுண்ணூட்டச்சத்து) கலவை 1 பயனாளிக்கும், 2 பயனாளிகளுக்கு பராம்பரிய நெல் விதைகளும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விதை தொகுப்பு பெட்டகம் மற்றும் 1 பயனாளிக்கு மரக்கன்றும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் தூய்மை பணியாளர்களுக்கான நலவாரிய அட்டை 5 நபர்களுக்கும் என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்தார்.

இம்முகாமிற்கு முன்னதாக 281 மனுக்கள் பெறப்பட்டதில், 184 மனுக்கள் ஏற்கப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொறுப்பு) ரவிச்சந்திரன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் செந்தில்குமார், தனி தாசில்தார்கள் பரமேஸ்வரி தங்கதுரை, வட்ட வழங்கல் அலுவலர் ரம்ஜான்போகம், வேளாண்மைதுறை உதவி இயக்குனர் தங்கபாண்டியன், தோட்டக்கலைதுறை உதவி இயக்குனர் இளவரசன் உள்ளிட்ட அனைத்துதுறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News