தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்க நிற மேகத்துடன் சூரியன்: திருவாரூர், முத்துப்பேட்டை பகுதியில் கொட்டி தீர்த்த கன மழை

திருவாரூர், ஆக. 14: திருவாரூர், முத்துபேட்டை பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் தினந்தோறும் 98 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருவதால் பொது மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 4ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சிறு குழந்தைகள் முதல் உயர் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

Advertisement

இதனால் நேற்று மாலை திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மேக மூட்டம் ஏற்பட்ட நிலையில் அதன் பின்னர் இடி, மின்னல் மற்றும் குளிர்ந்த காற்றுடன் கூடிய கொட்டி தீர்த்த கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. மேலும் இந்த மழை காரணமாக வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் முத்துப்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை அனல் பறக்கும் வகையில் கடும் வெயில் காணப்பட்டது, இதனால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்த நிலையில் பின்னர் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் லேசான குளிர்ந்த காற்று வீசிய நிலையில் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முத்துப்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளான தில்லைவிளாகம், இடும்பவனம், உதயமார்த்தாண்டபுரம், உப்பூர், ஆலங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

Related News