முத்துப்பேட்டை, டிச. 10: முத்துப்பேட்டை அருகே கல்லூரி மாணவி மாயமானார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 11 ந்தேதி மாணவி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனாலும் கல்லூரி மாணவி குடித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மாயமான கல்லூரி மாணவியை தீவிரமாக தேடி வருகிறார்.
+
Advertisement


