திருவாரூர், டிச. 10: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வரும் 13ந் தேதி திருவாரூரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் விளமல் ஆர்.வி.எல் நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது அவ்வப்போது சிறிய மற்றும் மாபெரும் அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
+
Advertisement


