நீடாமங்கலம்,ஆக.7: நீடாமங்கலம் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை விதிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்தி தலைமை வகித்தார்.
நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன், சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கலந்துகொண்டு போதைப் பொருள்களை தவிர்ப்பது, சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை பிரச்சாரமாக செய்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.



