Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓய்வு தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

திருவாரூர், ஆக. 7: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளை குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 2023ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பெட்டி கடையில் பொருட்கள் வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் சென்றார். அந்த சிறுமிக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்தார்.இதுகுறித்து நன்னிலம் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் கார்த்திகேயனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். நேற்று திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கார்த்திகேயனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.