Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வலங்கைமான் அருகே சோகம் பாம்பு கடித்து விவசாயி பலி

வலங்கைமான்,ஆக.7: வலங்கைமான் அடுத்த விடையல் கருப்பூரைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கீழ விடையல் ஊராட்சி விடையல் கருப்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜன். விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை வயலுக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் விக்னேஷ்வரி வயலுக்குச் சென்று கணவரை தேடி உள்ளார். அப்போது பாம்பு கடித்து மயங்கிய நிலையில் இருந்த கணவர் தர்மராஜனை உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி தர்மராஜன்(60) நேற்று முன்தினம் இரவு உயிரிழந்த நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து இறந்து போன விவசாய கூலி தொழிலாளிக்கு விக்னேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.பாம்பு கடித்து விவசாயக் கூலி தொழிலாளி இறந்த சம்பவம் அற்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.