திருவாரூர்,டிச.3: அமமுகவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் உட்பட திருவாரூர் மாவட்டத்தை 200 குடும்பத்தினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். திருவாரூரில் அமமுக ஒன்றிய செயலாளராக இருந்து வந்த மணிகண்டன் மற்றும் அமமுக ஆச்சி மன்ற குழு உறுப்பினரும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளருமான செங்கொடி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் பூபதி உள்ளிட்ட 200 குடும்பத்தினர் நேற்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.
+
Advertisement

