திருவாரூர்,டிச.3: திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 636 விவசாயிகள் தங்களது 3 லட்சத்து 24 ஆயிரத்து 837 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பீடு செய்துள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நெல்பயிருக்கு காப்பீடு செய்ய ஷீமா பொது காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரிபயிர் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

