Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கலெக்டர் தகவல்; மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்காததால் வலங்கைமானில் சம்பா சாகுபடி 2 லட்சம் ஏக்கராக குறைந்தது

வலங்கைமான், நவ. 3: டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை காலாதமதமாக திறக்கப்பட்டதால் பண்னை குட்டைகள் வறண்டு மீன் உற்பத்தி பாதிக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை காலதாமதமாக செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டது. ஆற்று நீரை நம்பி சாகுபடியை செய்யும் உழவர்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் இல்லை. கடந்த ஆண்டுகளில் குறுவை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு கால்நடைகளுக்கு வைக்கோல் தீவனமும் அதிகம் உற்பத்தியானது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி குறைவதால் வைக்கோல் தீவனம் பற்றாக்குறை ஏற்படும். கால்நடை வளர்க்கின்ற மிகச்சிறிய விவசாயிகளுக்கு வைக்கோல் கிடைப்பதற்கான உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை.

குளம், குட்டைகள், ஏரிகளில் தண்ணீர் நிரம்ப வாய்ப்பு இல்லாததால் உள்நாட்டு மீன் வளர்ப்பில் வழக்கமாக ஈடுபடுகின்ற மிகச்சிறிய உழவர்கள் உழவுத்தொழிலாளிகளுக்கு வாழ்வாதாரம் இழந்துவருகின்றனர். குளம், குட்டை, ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி தண்ணீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. அதனால் பல்லுயிர் பெருக்கமும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டுகளை விட சுமார் 2 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு சுருங்கி விட்டதால் விவசாயிகலுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன் விவசாயக் கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.

இந்நிலையில் குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாகவும் மழைநீரை சேமிக்கும் வகையிலும் 100 சதவீத மானியத்தில் பல்வேறு காலகட்டங்களில் 500க்கும் மேற்பட்ட பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக வேளாண் துறையின் மூலமும் ஊரக வளர்ச்சித்துறையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டது. அதே போன்று மீன் வளர்ப்பு துறையின் மூலமும் விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன.பாசனத்திற்கு வந்த குறைந்த அளவு தண்ணீரைவைத்து சாகுபடி மேற்கொள்வது மிகவும் சிரமமாகும். குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரப்ப வாய்ப்பு இல்லாமல் போனது. மேலும் தற்போது வடகிழக்கு பருவ மழை குறிப்பிடும்படி பெய்யாத நிலையில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் ஜூலை மாதங்களில் நிரம்பக் கூடிய நீர் நிலைகள் நவம்பர் வரை நிரம்பவில்லை. விவசாயிகளின் நிலை குறித்து த.வெ.க. அரசு சிந்திக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெர்விக்கின்றனர்.