Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவாரூரில் நாளை தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம்

திருவாரூர், அக். 2: திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நாளை மற்றும் 5ந் தேதி ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கும் பணி நடைபெறுகிறது என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த திமுக அரசு மூலம் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

அந்த வகையில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ரேஷன் பொருட்கள் அவர்களது வீடு தேடி சென்று வழங்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 12ந் தேதி துவங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டமானது துவங்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரில் சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.