மன்னார்குடி, அக். 2: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவாரூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடும் நோக்கில், ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு, கரைகள் உயர்த்தி கட்டப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், மன்னார்குடி வட்டம், தலையாமங்கலம் ஊராட்சி, சோழபாண்டி கிராமத்திலுள்ள தீர்த்தனம் குளம், திருமக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள திருமேனி ஏரி மற்றும் முத்துப்பேட்டை வட்டம், கீழநம்மங்குறிச்சி ஊராட்சி மங்கல் கிராமத்திலுள்ள பாப்பான் குளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புணரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


