திருவாரூர், அக். 2: திருவாரூர் கோட்ட அளவிலான மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 8ந் தேதி நடைபெறுவதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்திலும், திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டமானது ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் கோட்ட அளவிலான கூட்டமானது வரும் 8ந் தேதி திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில் இதில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
+
Advertisement


